வெளிநாட்டில் வேலை??...
இன்று கணினி படித்த பல இளசுகள் கனவில் நமிதவோ,ஸ்ரேயாவோ,தீபிகவோ வருவதில்ல..... படிச்சு முடிச்சத்தும் வேலை கிடைத்து விடுமா??....நான் தொழில் நுட்ப வல்லுநர் ஆகிவிடுவேனா??...என்னை பெரிதும் எதிர் பார்க்கும் என் குடும்ப எதிர்காலம் என்னவென்று எனக்கே அறியா புதிர்களை தகர்த்து எரிவேன??.....என்று தன் கனவுகள் வருகிறதாம்....
இப்படியேலம் கனவு காணுங்கள்,அந்த கனவு மெய்பட வாழ்த்துகள்....இருப்பினும் ஒன்று கூராசைபடுகிறேன் நண்பர்களே நீங்கள் என்ன தான் பெரிய கணினி வல்லுநர் ஆனாலும், வெளிநாட்டில் வேலை கிடைத்தாலும்,இப்பொது உள்ள சூழ்நிலையைப் பார்த்தல் அப்படி ஒரு வேலை கிடைக்காமல் இருபதே நல்லது என்று கூறுவேன்...
சமிபத்தில் எனது தோழி ஒருவரின் அண்ணனுக்கு அடோப்ப் என்கிற உலக பிரசித்தி பெற்ற ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது....கலிபோர்னிய மாகாணத்தில் அவர் வேலை கிடைத்ததாக அவர் கூறிச்சென்றார்!!....பின்னர் சில மாதங்களுக்கு பின்னர் அவர் என்னை தொடர்பு கொண்டார் அபோது அவரிடம் கேட்டேன்,உங்களுக்கு வாழ்வில் எல்லாம் கிடைத்து விட்டது அடுத்து எப்போது கல்யாணம் என்று எங்கள் பேட்சு தொடங்கியது....பின்னர் சற்று ஊர் விசயங்களை எல்லாம் பேசதொடங்கினோம்...அப்போது அடிபட்டது பொருளாதார சரிவு....அவரிடம் கேட்டேன் உங்களுடைய கம்பெனி உலக புகழ் பெற்றது அல்லவா பொருளாதார சரிவு உங்களை சிறிது சீண்டி இருகதே என்று நான் கூற,அவர் சொல்ல ஆரம்பித்தார்....அவர் கூறினார் "எல்லா மென்பொருள் நிருவதிலும் நடப்பவை தான்,வேறொன்றும் புதிதாக இல்லை"....அவரின் சம்பளத்தை பற்றி கேட்ட போது அவர் சொன்னது "" வெளியில் இருந்து பார்ப்பதற்கு தான் உலகில் ஒரு பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறேன்,ஆனால் சம்பளம் யானை பசிக்கு சோளப்பொறி போன்று தான் வருகிறது"".. ..என்று வேலை தொலைந்து விடுமோ என்ற அச்சத்தோடு அவர்கள் கனவு இருக்கிறதாம்......
சரி, சிலவருடங்கள் முன்பே அமெரிக்காவிற்கு சென்றார் எனது அண்ணன்,அங்கு அவருக்கு நல்ல சம்பளம்,தனது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் அளவுக்கு ஒரு வாழ்கை...சிலநேரங்களில் நினைப்பது உண்டு....அமெரிக்காவில் வேலை, சூப்பரான சம்பளம்,ராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று...ஆனால் இந்த மனநிலை ஆளை மாற்றி விட்டது; அவரின் கூற்றை கேட்டு....""அமெரிக்கா......மண்ணுலகத்தில் இருக்கும் சொர்க்கம் கையில் காசு உள்ளவரை மட்டும் தான்...கையில் காசு இல்லை என்றால் அது நரகத்தினும் கடினமானது...""...பின்னர் அவரின் அந்த வார்த்தைகள் எனது மனதை நெருட தொடங்கியது..... பின் ஆழ்ந்து யோசித்த போது ஒரு உண்மையை உணர்ந்தேன் .....இந்தியாவில் காசு இல்லை என்றால் என்ன உறவுகள் இருப்பார்கள் உங்களுக்கு உதவ,அல்லது நண்பர்கள் இருப்பார்கள் உதவ(பொருளாதார ரீதியாக சொல்கிறேன்),நம் நாட்டில் பந்த பாசங்கள் அதிகம்,கஷ்ட காலங்களில் உறவுக்கு உதவ கண்டிப்பாக முன்வருவார்கள்....ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளை உறவுகளை வேறு விதமா பார்கிறார்கள்...உதாரணத்துக்கு தான் பெற்ற பிள்ளை ஆகட்டும் 18 வயதுக்குப் பின்னர் கண்டிப்பாக தன் சொந்தக் காலில் தான் நிற்க வேண்டும்(ஒரு வகையில் அது நல்லது தான்...அவர்களின் தன்னபிக்கை வளரும்) ஆனால் இதுகூட பரவால்லை இல்ல பெரும்பாலான விடுகளில் நம் நாட்டைப் போல உறவுகள் உறுதியாக இருப்பதில்லை.... வெளிநாடுகளில் உறவுகள் இவ்வாறு இருக்க...பழக்கம் இல்லாத ஊர்,தெரியாத மக்கள் ,புதிய கலாச்சாரம்,புதிய உணவு முறைகள்,என்ன எல்லாவற்றிலும் சற்று புதிதா இருக்கும் ஊரில் காசு இல்ல என்ற கதி என்னவாக இருக்கும் நரகத்தை விட கொடுமையாக தான் இருக்கும் என்று உங்களுக்கு எடுத்துச்சொல்ல தேவையில்லை.....
தொடரும்....
Monday, February 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment