Sunday, January 17, 2010

மைனற்குஞ்சுகல்லுக்கு ஒரு நற்செய்தி!!...ஐம்பதினாங்கு ஆண்டுகள் தவம் கலைந்தது!!

மக்களே பொங்கல் எல்லாருக்கும் நல்லபடியா இருந்துருக்கும்னு நம்புறேன்!...முன் பதிவுசெய்த பதிவு போலவே இந்த பொங்கல் எனக்கு  ஒரு இனிய பொங்களாகவே அமைந்தது,ஆனதம்,அன்பு,ஆரவாரம் என எல்லாம் கலந்த ஒரு சக்கரைபொங்களாகவே இருந்தது,உங்களுக்கும் அப்படியே என்று நம்புகிறேன்..என்னடா தவம் அது இதுன்னு தலைப்ப போட்டுட்டு  என்னமோ பேசுறேன்னு நினைக்காதிங்க இதோ மேட்டர் வந்துட்டேன்,"change is the only thing that never change" என்று பலர் உங்களிடம்  பீட்டர் விட்டு கேட்ட்ருபிங்க,அந்த மேற்கொல்லில் கூறியது என்ன தப்பு இருக்கு,மனிதனின் பரிணாம வளர்ச்சி,நாகரிக வளர்ச்சி,அறிவியல் வளர்ச்சி,என்று எல்லாவற்றிலும் மாற்றம் என்பது மாறாத ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது.இந்த வாக்கிய ஒரே ஒரு மனித இனத்தின் கண்டுபிடிப்பிறக்கு ஐம்பதுவருடமாக எடுத்துகாட்டாக கூறமுடியாமல் இருந்தது,நீங்க யோசிங்க ரொம்ப நாளாக மாறாத மனிதனின் கண்டு பிடிப்பு என்னவென்று,ஒரு பட்டியல் போட்டால் விரல்விட்டு என்னுகிற கண்டுபிடிபுகளே அடங்கும்.
ஒரு 25வருஷம் பிளாஷ் பாக் போவோம்,போனின்களா?ஹ்ம்ம் ஆண் என்றாலே ஒரு கம்பீரம்,ஒரு முரட்டுத்தனமான  பாவம்.அப்படிப்பட்ட ஆண் இனத்திற்கு,கம்பீரமான இருசக்கர வாகணம் எது என்று சொன்னால் அன்று முதல் இன்று வரை புல்லட் தான் ஒத்துப்போகும் இதில் வேறு மாற்று கருத்தே இருக்கமுடியாது.நகர அமைப்புகள் வருவதற்கு முன்பே வந்த இந்த வகை இரு சக்கர வாகணங்கள் ஒரு சமுகத்தில் அதை வைதிருபவரை ஒரு உயர்ந்த நிலையில் தான் அவரைப் பார்க்கவைத்து,முன்பெல்லாம் புல்லட் என்றாலே ஒரு முறுக்கோடு சுற்றித்திரியும் மைனற்குஞ்சுகள் :-) தான் நினைவுக்கு வருகிராகள்,அப்பன பாத்துகோங்க புல்லட் எப்படி பட்ட ஒரு "ப்ளே பாய் பைக்" என்றே சொல்லவேண்டும்!!...அன்றைய காலத்தில் மிக கட்டுப்பாடாக இருந்த பெண்களையே மயக்கிய வாகணம் இந்த புல்லட் தாங்க :-)!!....


இப்படி பட்ட ஒரு ஆண்மை பொருந்திய வாகனதிருக்கு ஐம்பதினாங்கு வருடங்களாகவே மாற்றம் என்ற தவம் தவமகவே தன இருந்தது அது கலைக்க படவே இல்லை அந்த பெருந்தவத்தை ரம்ப்பை யாலும் கலைக்க முடியவில்லை.நான் வெளிப்புற அமைப்பை கூறவில்லை என்ஜின்(http://www.royalenfield.com/admin/pdf/51d84d5d_2007_Bullet350.pdf) வடிவமைப்பை கூறுகிறேன்,ஆமாங்க இந்த ஐமப்தி  நான்கு வருடங்களாக மாற்றப்படாத தொழில்நுட்பம்.....
மேலும் பார்க்கhttp://www.royalenfield.com/Motorcycles/bullet350.aspx


அனால் இந்த வருடம் அந்த தவம் கலைந்து ஒருவழியாக இந்த மன்மத வாகணதிற்க்கு அதிக திறன் கொண்ட என்ஜின் மாற்றப்பட்டுள்ளது.350cc திறன்  என்ஜின் இப்போது  500cc திறன்கொண்ட என்ஜின் புது வலிமையுடன் வெளிவந்துள்ளது.புல்லட்டின் பழமை மாறாமல(வெளிப்புற அமைப்பு)மாறாமல் அதிக திறனுடனும் ,தொலில்நுபதுடனும் இந்த புது மாடல் வடிவமைக்க பட்டுள்ளது என்பது இதன்  சிறப்பம்சம்!!...
.
என்னதான் ஒரு லட்சம் கொடுத்து பலவகை புது மடல் பைக்குகள் வாங்கினாலும்,புல்லட் வங்கி மிதி மிதி மிதிச்சு புடூ புடூ புடுனு ஸ்டார்ட் ஆனதும் வரும்பாருங்க ஒரு உன்னத உணர்வு ஐயோ பலலட்சம் கொடுத்தாலும் கிடைக்காது!!....இது ஒரு மன்மத வாகணம் அல்ல அதையும் தாண்டி ஒரு புனிதமானது!!

ஆபீசில் இணையதளம் http://www.royalenfield.com/royal-enfield-classic/classic.html

 புல்லட்டின் பெருமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு கண்டிப்பாக http://www.youtube.com/watch?v=c1Um6BH_aHM&feature=player_embedded பார்க்கவும்.
எல்லா புதுவருடத்தின் போது ஒளிபரப்படும் wish happy new year என்கிற கமல் பாடல் முதல்,வருடம் முழுவது வையுறு குலுங்க சிரிக்க வைக்கு கைப்புள்ள வடிவேல் வரை புல்லட் தாங்க வசுருந்தங்க!!
நானும் ஒரு புல்லட் வைதுருகிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்!!
நாங்களும் மைனர்**** தானுங்கோ!!



1 comment: